சூடான செய்திகள் 1

8ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS|COLOMBO) – சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (03) 8ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

ரயில் சாரதிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிபில் ஈடுப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்படும் வரை தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர் மற்றும் காவலர்கள் ஆகியோரை சேவையிலிருந்து விலகியவர்களாக கருத ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

editor