வகைப்படுத்தப்படாத

சீன இறக்குமதி பொருட்களுக்கு இன்று முதல் 25% கூடுதல் வரி

(UTV|AMERICA)-34 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் விதிப்பு இன்று முதல் அமலாகிறது.

இதனால், வர்த்தகப் போரில் பதிலடி கொடுப்பதற்கான காரணம் ஆசியாவில் உருவாகுவது உறுதியாகியுள்ளது.

இதே நாளில் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதித்து நிலைமையை சீனா சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி பொருட்களுக்கான இந்த கூடுதல் வரி விதிப்பு, உலகின் மிகப் பெரிய இரு பொருளாதாரங்களுக்கு இடையில் பெரும் வர்த்தக சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.

இந்த வர்த்தக சர்ச்சை உலக பங்குச்சந்தைகளில் கொந்தளிப்பை உருவாக்கி, உலக வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் 50 பில்லியன் டொலர் மதிப்பிலான இறக்குமதி பொருட்களின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதித்து கட்டளையிட்டுள்ளார்.

வரி விதிப்பின் முதல் சுற்று இன்று வெள்ளிக்கிழமை அமலாகிறது.

அதன்படி, விமான டயர் மற்றும் வணிக ரீதியிலான பாத்திரங்கழுவும் எந்திரங்கள் உள்பட அமெரிக்கா இறக்குமதி செய்கின்ற 34 பில்லியன் மதிப்பிலான குறிப்பிட்ட சீனப் பொருட்களுக்கு கூடுதலான வரி செலுத்த வேண்டியுள்ளது.

சீனாவும் விவசாய உற்பத்தி பொருட்கள் மற்றும் கார்கள் போன்ற அமெரிக்க உற்பத்தி பொருட்களின் மீது 25 சதவீத கூடுதல் வரி வசூலிக்க தொடங்கும்.

இவ்வாறு கூடுதல் வரி விதிப்பை திட்டமிடப்படுவதற்கு முன்னால், தனது நாடு உள்பட முழு உலக நாடுகள் மீதும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

சமீபத்திய தசாப்தங்களில் உலக அளவில் பொருட்களின் பரிமாற்றத்தை உருவாக்கியுள்ள சுதந்திர வர்த்தக கொள்கைகளை புறக்கணிக்கின்ற ஜனாதிபதி டிரம்பின் வர்த்தகப் பாதுகாப்புவாத கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது.

அமெரிக்க தொழில்நுட்பங்களும், அறிவுசார் சொத்துரிமைகளும் நியாயமற்ற முறையில் சீனாவுக்கு வழங்கப்படுவதையும், அமெரிக்கர்களுக்கான வேலைகளை பாதுகாத்து கொள்ளவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இன்னும் 16 பில்லியன் இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பை ஆலோசித்து, பின்னர் அமலாக்கப் போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சலவை இயந்திரங்கள், சூரிய மின் தகடுகள், எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு கூடுதல் வரியை ஏற்கனவே டிரம்ப் விதித்துள்ளார்.

தன்னுடைய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக இதற்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சீனா தெரிவித்துள்ளது.

ஆலோசனையிலுள்ள 16 பில்லியன் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதோடு, இன்னும் மேலதிக வரி விதிப்பு இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சீனா அதனுடைய நடைமுறைகளை மாற்றியமைக்காவிட்டால், மேலும் 200 பில்லியன் மதிப்புடைய சீன இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிப்பு இருக்கும் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

அமெரிக்கா வரி விதிக்கின்ற பட்டியலை தயாரிக்கும் பட்சத்தில், அதே போன்ற எண்ணிக்கையிலான பொருட்கள் மற்றும் தரத்திற்கு சமமான நடவடிக்கைகளோடு பதிலளிக்கும் என்று சீனா கூறியுள்ளது.

இத்தகைய கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பையொட்டி பங்குச்சந்தைகள் தளர்ச்சி கண்டு, வர்த்தகப் பதற்றங்களால் சந்தை மதிப்பு குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா இதுவரை அறிவித்துள்ள கூடுதல் வரியால் உலக அளவிலான வர்த்தகம் 0.6 சதவீதத்திற்கு சமமாக பாதிக்கப்படும் என்றும், உலக அளவில் 0.1 சதவீத ஜிடிபி குறையும் என்றும் மோர்கன் ஸ்டான்லி மதிப்பிட்டுள்ளது.

கூடுதல் வரி விதிப்பால் 100 பில்லியன் மதிப்பிலான இறக்குமதி பொருட்கள் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படும்போது, உலக வர்த்தகத்தில் 0.5 சதவீதமும், உலக ஜிடிபியில் 0.1 சதவீதமும் பாதிக்கப்படுவதை குறிக்கும் என்றும் இந்த வங்கி கூறியுள்ளது.

விநியோக தொடரில் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றியும், பொதுவாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஏற்படும் பதற்றம் அதிகரிப்பது பற்றியும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, கணினிகள் மற்றும் மின்னணுப் பொருட்களை இலக்கு வைத்து சீனாவின் இறக்குமதி பொருட்கள் மீதான அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு, சீனாவை விட அதிகமாக பன்னாட்டு நிறுவனங்களையும், ஆசியாவிலுள்ள நிறுவனங்களையும் பாதிக்கும் என்று வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆலோசனை நிறுவனமான பீட்டர்சன் இன்ஸ்டிடுட் ஆப் இன்டர்நேஷனல் எகனாமிஸ் கூறியுள்ளது.

இந்த வர்த்தக சண்டை சீன அமெரிக்க உறவுகளின் பிற பகுதிகளையும் பாதிக்கலாம்.

இந்த சண்டை அதிகமானால், அமெரிக்கா சீனாவிடம் விற்பதைவிட ஏறக்குறைய 4 மடங்கு அதிகமாக சீனாவிடம் வாங்குவதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட பகுதிகளை சீனா கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.

பொருளாதார வட்டத்திற்கு வெளிப்பகுதிகளில் சீனா இதற்கு உதவிகளை பெறலாம்.

வட கொரியாவோடு அணு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதிபர் டிரம்ப் நிர்வாக திறனை குறைப்பதை சீனா கடைசி முயற்சியாக மேற்கொள்ளலாம் என்று பீட்டர்சன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மூடுபனியால் வாகனங்கள் மோதல் – 6 பேர் உயிரிழப்பு

மழையுடன் கூடிய காலநிலை

ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர், மங்கள சரவீரவை சந்திப்பு