சூடான செய்திகள் 1

என்னை யாராலும் பதவியில் இருந்து நீக்க முடியாது

(UTV|COLOMBO)-அமைப்பாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு சிலர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் இரத்மலானை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரத்மலானை, படோவிட்ட பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களுக்கான வீட்டு உரிமை பத்திரம் மற்றும் கடன் வசதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வொன்று நேற்று (04) வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இரத்மலானை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவும் கலந்து கொண்டிருந்தார்.

பதவியை சிலருக்கு வழங்காத காரணத்தால் தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கு முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சேவை செய்யாத யாருக்கும் பதவியை தரப்பேவதில்லை எனவும், புகை அடித்தும் தன்னை யாராலும் பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சஜித் பிரேமதாச என்றாவது ஒரு நாள் நாட்டின் ஜனாதிபதி ஆவார் எனவும் அதனை கண்களால் காண்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

500 பாடசாலை கட்டடங்கள் ஒரே நாளில் இன்று மாணவர்களிடம் கையளிப்பு

ஐ.தே.க வின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 30 தொழிற்சங்க நடவடிக்கையில்…