கேளிக்கை

மீண்டும் காதல் வலையில் திரிஷா?

(UTV|INDIA)-தமிழ் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருந்து வருகிறார்.

தற்போது இவரது நடிப்பில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படப்பிடிப்பு இல்லாததால் நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றார் திரிஷா. அங்கு உயரமான கட்டிடத்தில் நின்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது ‘A table for two ❤️❤️’ என்று பதிவு செய்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், திரிஷா காதல் வலையில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் யார் அது? என்று கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.
திரிஷா இதற்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து, திருமணம் வரை சென்று நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அஜித் 1.25 கோடி நிதியுதவி

ராணா திருமணம் – விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

மேலும் ஒரு பிரபல நடிகைக்கு கொரோனா