வணிகம்

இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

(UTV|COLOMBO)-ஆஸியப் பிராந்தியத்தின் முன்னணி நிதி வெளியீட்டு நிறுவனமான பினான்ஸ் ஏஸியாவின் 2018ம் ஆண்டுக்கான வருடாந்த சாதனை விருதில் இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் இந்தக் கீர்த்திமிக்க விருதை கொமர்ஷல் வங்கி வென்றுள்ளமை இது தொடர்ந்து எட்டாவது தடவையாகும். இலங்கையில் இந்த விருதை முதற் தடவையாக வென்ற நிறுவனமும் இதுவேயாகும். கடந்த ஒரு தசாப்த காலத்தில் வங்கியின் தொடர்ச்சியான செயற்பாட்டை இது கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பிட்ட ஆண்டில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் செயற்பாடு, இலாபம் உற்பட நிதி பெறுபேறுகள், NPL விகிதாசாரம், ஒதுக்கீடுகள், சமபங்கு மீள் வருமானம், மூலதன நிறைவு விகிதாசாரம், மொத்த சொத்துக்கள், கடன்கள், வைப்புக்கள், கிளை வலையமைப்பு, உள்ளுர் இலக்குகளுக்கான அளவீடுகள், தூர நோக்கு மற்றும் நீண்ட கால மூலோபாயம், சந்தை நிலைப்பாடு எதிர் அண்மைய போட்டியாளர், பங்குச் சந்தை மதிப்பீடுகளின் பின்னூட்டங்கள் என்பனவற்றின் அடிப்படையிலேயே இந்த விருதுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொமர்ஷல் வங்கி அதன் பிரத்தியேகமான (தனியார் உள்நாட்டு வங்கிகள்) என்ற வகைப்படுத்தலின் கீழ் (2017)ம் ஆண்டுக்கான பினான்ஸ் ஏஸியா மதிப்பீட்டின் கீழ் சிறந்த வங்கிக்கான தகுதியை வென்றுள்ளது. அதி உயர் சந்தை மூலதனமயமாக்கல், உயர் மட்ட மொத்த வருமானம், உயர் மட்ட செயற்பாட்டு வருமானம், உயர் மட்ட இலாபத்துக்கு முந்திய வரி, உயர் மட்ட இலாபத்துக்குப் பிந்திய வரி, உயர் மட்ட மொத்த சொத்து, உயர் மட்ட மொத்த கடன்கள், மிகச் சிறந்த CASA விகிதாசாரம் என்பனவற்றிலும் கொமர்ஷல் வங்கி இந்த விருதுக்கான தெரிவில் முன்னணியில் உள்ளது.

2017ல் மட்டும் வங்கி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) கடனாக 131.8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. அரசாங்கத்துக்கு வரியாக 11.5 பில்லியன்களை செலுத்தி உள்ளது. நாட்டின் இறக்குமதியில் 10.56 வீத பங்களிப்பையும் ஏற்றுமதியில் 18.58 வீத பங்கினையும் குறிப்பிட்ட காலப்பகுதியில் செலுத்தி உள்ளது. ஆசியாவில் மிகப் பெரிய பாதப்பதிவைக் கொண்டுள்ள இலங்கை வங்கியாகவும் அது திகழ்கின்றது.

´எட்டாவது தடவையாக இந்த விருதுக்காக நாம் இயல்பாகவே உயர்த்தப்பட்டுள்ளோம்´ என்று கூறினார் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ் ரெங்கநாதன். ´பினான்ஸ் ஏஸியாவின் விருதானது ஒரு வங்கியின் செயற்பாட்டைப் பொருத்தமட்டில் மிகச் சிறந்த ஒரு அடையாளமாகக் கருதப்படுகின்றது.

மறுபுறத்தில் அது முற்றிலும் மிக முக்கிய செயற்பாட்டு குறிகாட்டிகளைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுவதாலும் சுதந்திரமான பின்னூட்டங்களை அது கொண்டிருப்பதாலும் மிக உயரியதாகதாகவும் கருதப்படுகின்றது. இந்த சீரான மதிப்பீடானது சிறிய நாடுகளுக்கு எந்த விஷேட சலுகைகளையும் வழங்குவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்´ என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கிக்கு பினான்ஸ் ஏஸியா வழங்கியுள்ள விருதானது இந்தப் பிராந்தியத்தில் சிறந்த உள்ளுர் வங்கிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அந்தந்த நாடுகளின் தலைசிறந்த வங்கிகள் வரிசையில் கொமர்ஷல் வங்கியையும் நிலைநிறுத்தி உள்ளது. DBS வங்கி (சிங்கப்பூர்) CTBC வங்கி (சீனா) ஸ்டேன்டர்ட் சார்டட் வங்கி (ஹொங்கொங்) சியாம் கொமர்ஷல் வங்கி (தாய்லாந்து) வியட்கொம் வங்கி (வியட்நாம்) HDFC வங்கி (இந்தியா) சென்ட்ரல் ஆஸியா வங்கி (இந்தோனேஷியா) கூக்மின் வங்கி (கொரியா) CIMB வங்கி (மலேஷியா) MCB வங்கி (பாகிஸ்தான்) சிற்றி வங்கி (பங்களாதேஷ்) என்பனவே அந்த வங்கிகளுள் சிலவாகும்.

1996ல் முதற் தடவையாக வெளியிடப்பட்ட பினான்ஸ் ஏஸியா ஆஸிய நிதிச் சந்தை பற்றிய தகவல்களை உலகளாவிய மட்டத்தில் வெளியிடும் பிரதான வெளியீடாகத் திகழ்கின்றது. ஹொங்கொங்கில் இருந்து வருடம் 11 வெளியீடுகள் வெளிவருகின்றன. மிக அண்மிய நிதி அனுகுமுறைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மற்றும் தனிப்பட்ட விசாரணைகள் என்பனவற்றை இது தாங்கி வருகின்றது. ஹேமார்க்கெட் மீடியா லிமிடட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதே இந்த சஞ்சிகை. பிரிட்டனில் மிகப் பெரிய தனியார் உரிமை கொண்ட வெளியீட்டகம் இதுவென்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

இலங்கையில் ஆகக் கூடுதலான விருதுகளை வென்றுள்ள நிதி நிறுவனமான கொமர்ஷல் வங்கி 2017 நிதி ஆண்டின் முடிவில் மொத்த சொத்துக்களாக 1.143 டிரில்லியன்ரூபவ் மொத்த வருமானமாக 115.6

பில்லியன், தேறிய வருமானமாக 16.5 பில்லியன், வைப்புத் தளம் 850.1 பில்லியன், மொத்தக் கடன்களும் பெறுகைகளும் 754.7 பில்லியன் என தனது நிதிப் பதிவுகளைக் கொண்டுள்ளது. தொடர்ந்து ஏழு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 261 கிளைகளுடனும், 775 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது.

வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது இலங்கையின் தலைசிறந்த வங்கி, மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2016ல் மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நியூயோர்க் முக்கிய வைபவம் ஒன்றில் சொக்லேட் டீ பானம்

சர்வதேச ஆயுர்வேத கல்விக் கண்காட்சி நாளை கண்டியில் ஆரம்பம்

பேக்கரி உற்பத்தியாளர்களுக்கும் விஷேட அறிவித்தல்