சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதை மறுக்கும் சீனா

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்தி அடிப்படையற்றது என்று சீனா ஹாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

ஒருபோதும் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்யவில்லை என்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்குமாகவே நிர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

குறித்த சர்வதேச ஊடகம் வௌியிட்டுள்ள செய்தி பொய்யான கருத்துக்களையும், அடிப்படையற்ற தகவல்களையும் வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கு மிகவும் அவசியம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திடீர் முடிவு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…