சூடான செய்திகள் 1

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இம்ரான் கான்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் சதொச பிரதித்தலைவரும் முன்னாள்  மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) , கட்சியின் அரசியல் விவகாரப்பொறுப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளர் அன்பாஸ் அமால்தீன்,மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட கல்விப் பொறுப்பாளர் ரியாஸ் மௌலவி,குருணாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ,நபீஸ் காஸிம் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சகல இனத்தவரும் ஒரே கூரையின் கீழ் கல்விகற்கும் பின்புலம் உருவாக்கப்படவேண்டும்

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

முன்கூட்டிய புகையிரத பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானம்