விளையாட்டு

விராட் கோலி டி-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை

(UTV|INDIA)-இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி தலைவர் விராட் கோலி டி20 போட்டியில் 1983 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 17 ஓட்டங்கள் எடுத்தால் 2000 ஓட்டங்களை கடந்த 3வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

ஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2வது ஆட்டத்தில் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ஓட்டங்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ஓட்டங்களை கடந்து 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 9 ஓட்டங்களை எடுத்தபோது இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி. இவர் 56 போட்டிகளில் மிக விரைவாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

46 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி பின்னிலையில்

ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிக்கு இலங்கை வீரர்கள்

அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர்