(UTV|COLOMBO)-கிளிநொச்சி, உமயாபுரம் ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி பாதசாரிகள் கடவை ஊடாக கடந்து பாதையின் மறுபக்கத்திற்கு செல்லும் போது வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உமயாபுரம், பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த 08 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]