சூடான செய்திகள் 1

இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் நியமனங்களை நிறுத்துமாறு கோரி, திட்டமிட்ட அடிப்படையில் இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வியைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன உள்ளிட்ட 11 சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளன.

சில ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், குறித்த பிரச்சினை தொடர்பில் இணைக்கப்பாடு ஏற்படவில்லை என அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், திட்டமிட்ட அடிப்படையில் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இன்று முன்னெடுக்கப்பட உள்ள பணிப்புறக்கணிப்பை மலையக கல்விசார் அதிகாரிகள் புறக்கணிப்பதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தொழிற்சங்கங்கள் என்ன கூறினாலும், சட்டத்தை மதிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிப்பார்கள் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் வழமைபோல தங்களது பிள்ளைகளை பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைப்பார்கள் எனத் தாம் நம்பிக்கை கொள்வதாகவும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இலங்கைக்குள் மரண தண்டனையை அமுல்படுத்த ஐ.தே.க எதிர்ப்பு

இனவாதிகளை பலப்படுத்த வீடு வீடாக வாக்கு கேட்டு அலைகின்றார்கள் – ரிஷாத்

அரச தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கைது