(UTV|RUSSIA)-உலக கிண்ண கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, மெக்சிகோவை சமரா ஸ்டேடியத்தில் இன்று சந்திக்கிறது.
லீக் சுற்றில் சுவிட்சர்லாந்துடன் சமநிலை (1-1) கண்ட பிரேசில் அணி, அதன் பிறகு கோஸ்டாரிகா (2-0), செர்பியா (2-0) அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது.
கணிக்க முடியாத அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் மெக்சிகோ லீக் சுற்றில் உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பேரதிர்ச்சி அளித்தது. தென் கொரியாவையும் (2-1) பதம் பார்த்த மெக்சிகோ கடைசி லீக்கில் சுவீடனுடன் (0-3) தோல்வியை தழுவியது.
ஜெர்மனியை போன்று பிரேசிலின் கனவையும் சிதறடிக்கும் முனைப்புடன் மெக்சிகோ அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர்.
கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் மற்றும் மெக்சிகோ அணிக்காக சர்வதேச போட்டிகளில் 49 கோல்கள் அடித்துள்ள அனுபவம் வாய்ந்த ஜாவியர் ஹெர்னாண்டஸ் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை தூண்கள் ஆவர்.
2014 ஆம் ஆண்டு உலக கிண்ண பிரேசிலுக்கு எதிரான லீக்கில் குல்லர்மோ ஒச்சாவ் ஒரு கோல் கூட அடிக்க விடாமல் அந்த ஆட்டத்தை கோல் இன்றி சமநிலைக்கு கொண்டு வந்தது நினைவு கூரத்தக்க விஷயமாகும். எல்லா வகையிலும் மெக்சிகோ முட்டுக்கட்டை போடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் வெற்றி வாய்ப்பில் பிரேசிலின் கையே சற்று ஓங்கி நிற்கிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]