சூடான செய்திகள் 1

தொற்றாநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நாளாந்தம் தொற்றாநோய்களினால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றாநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 9,500 நோயாளர்கள் நாளாந்தம் சிகிச்சை பெற்றுவருவதாக தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

வருடந்தோறும் 3 மில்லியன் பேர் தொற்றாநோய் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தொற்றாநோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் கூறினார்.

அதேநேரம், தொற்றாநோய் காரணமாக நாளாந்தம் 245 பேர் உயிரிழப்பதாகவும் தொற்றாநோய்ப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

இன்று காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்