சூடான செய்திகள் 1

குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பெண்கள் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று (02) காலை 10 மணியளவில் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 பேரும் பெண்கள் எனவும், இவர்களில் 12 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 3 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு

மின்கம்பம் விழுந்ததால் புகையிரத சேவை பாதிப்பு

குவைத்திற்கு சென்ற 60 பெண்கள் நாடு திரும்பினர்