சூடான செய்திகள் 1

பெண்கள் மீது கத்தி குத்து தாக்குதல்

(UTV|COLOMBO)-ஊருபொக்க, மில்லமுல்லஹேன பகுதியில் நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட கத்தித் குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மூன்று பெண்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த பெண்களை ஹீகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மில்லமுல்லஹேன பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான 40 வயதுடைய ஒருவர் கொலை செய்த வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டில் மயக்கமுற்று விழுந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரும் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (02) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அனைத்து மாவட்டங்களதும் இறுதி முடிவுகள்

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு