சூடான செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளில் பெறுமதிசேர் வரியை நீக்குவது குறித்து இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு

(UTV|COLOMBO)-தனியார் வைத்தியசாலைகளில் அறிவிடப்பட்டு வந்த 15 வீத பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு திறைசேரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

இதுதொடர்பாக நிபுணத்துவ வைத்திய சங்கத் தலைவர் டொக்டர் சுனில் விஜயசிங்க தெரிவிக்கையில் இதற்கான பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை உள்நாட்டு இறை வரி திணைக்களத்திற்கு இதுவிடயம் தொடர்பில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அனைத்து வைத்தியர்களும் இந்தத் தீர்மானத்தை வரவேற்பர் என்று தெரிவித்தார்.

 

ஏனைய வேண்டுகோள்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்தில் வைத்தியசாலை கட்டணங்களை மேலும் 12 வீதத்தால் குறைக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

FCID யை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம்

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பேரணி இன்று