வணிகம்

கொழும்பில் ‘நிர்மாணம் 2018’ கண்காட்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் ´நம்பர்-1´ நிர்மாணத்துறை கண்காட்சியாக புகழ்பெற்றுத் திகழ்கின்ற ´நிர்மாணம் 2018´ (Construct 2018) கண்காட்சியானது ஆகஸ்ட் 24 முதல் 26ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள சிறிமாவோ பண்;டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் (SBMEC) நடைபெறவுள்ளது.

அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது சந்தேகத்திற்கு இடமற்ற விதத்தில் இலங்கையின் மிகப் பெரியதும், எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடியதுமான கட்டிட நிர்மாணத் துறைசார் நிகழ்வாக காணப்படுகின்ற அதேவேளை, கட்டிட நிர்மாணப் பொருட்கள், கட்டிட நிர்மாண சேவை மற்றும் நிர்மாண உபகரணங்கள் உள்ளடங்கலாக பரந்துபட்ட வகைகளிலான நியமமாக்கப்பட்ட சேவைகளை காட்சிப்படுத்தும்.

ஒட்டுமொத்த தென்னாசியப் பிராந்தியத்திலுமே கட்டிட நிர்மாணத் துறையில் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற அதேவேளை அனைத்து விடயங்களையும் தன்னகத்தே கொண்ட குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக மதிப்பிடப்படுகின்ற இக் கண்காட்சியை, தேசிய நிர்மாண சங்கம் இலங்கை (NCASL) தொடர்ச்சியாக 18ஆவது வருடமாக ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய நிர்மாண சங்கம் இலங்கையின் தலைவர் திரு. அதுல பிரியந்த கலகொட கருத்துத் தெரிவிக்கையில், ´எண்ணிலடங்கா உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுணர்களை ஒன்றுபடுத்தி ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகின்ற ஒரு அற்புதமான நிகழ்வாக திகழ்கின்ற ´நிர்மாணம் 2018´ கண்காட்சியை ஏற்பாடு செய்து நடாத்துவதையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். ´நிர்மாணம் 2018´ கண்காட்சியானது நிர்மாணத் துறை தொடர்பான முழுமையான தீர்வுகளை வழங்குவதுடன், அத் தீர்வுகள் உலகளாவிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இன்றைய நடைமுறைப் போக்குகளுக்கு இணையானவையாகவும் அமைந்திருக்கும். உள்நாட்டிலும், இப்பிராந்தியத்திலும் இருக்கின்ற அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கவரும் விதமாகவும் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் முகமாகவும் இந்தக் கண்காட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் நவீன மற்றும் புத்தாக்க கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட காட்சிக் கூடங்கள் காணப்படுவதுடன், இங்கு வருகைதரும் பார்வையாளர்கள் கட்டிட நிர்மாணத்தின் விதிமுறைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக கொண்டிருக்கின்ற கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் இது முக்கிய பங்கினை வகிக்கும்´ என்று தெரிவித்தார்.

´2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கண்காட்சி அதிவேகமாக வளர்ச்சியடைந்திருப்பதுடன், பல்வேறு புதிய மற்றும் திறமையான அம்சங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய உலகளாவிய போக்குகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு அமைவாக பொது மக்களுக்கு கட்டிட நிர்மாணம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் உயரிய நோக்கத்திலும், காட்சிப்படுத்துனருக்கு சிரமமற்ற வாய்ப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவுமே இக் கண்காட்சி உருவாக்கப்பட்டது. இலங்கையிலும் இப்பிராந்தியத்திலும் கட்டிட நிர்மாணத் துறையில் ஈடிணையற்ற கண்காட்சியாக இது திகழ்வதையிட்டு நாம் மிகவும் பெருமையும் திருப்தியும் அடைகின்றோம்´ என்று திரு. கலகொட மேலும் குறிப்பிட்;டார்.

இக்கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான திரு. றுவான் டீ சில்வா கருத்துத் தெரிவிக்கையில், இக்கண்காட்சியானது எப்போதும் உயர் தரநியமங்களை பேணி வருவதுடன், இது உண்மையில் முழு விடயங்களும் உள்ளடக்கிய இலங்கையின் மாபெரும் கட்டிட நிர்மாணத்துறை கண்காட்சியாகவும் மிளிர்கின்றது என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ´நிர்மாணம் 2018´ கண்காட்சி அனைத்து விடயதானங்களையும் உள்ளடக்குகின்ற அதேநேரத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காட்சிப்படுத்துனர்கள் இன்று கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற மிகச் சிறந்த நிர்மாணத் துறைசார் தீர்வுகளை காட்சிக்கு வைக்கின்றார்கள். சர்வதேச அளவிலான வெளிக்கொணர்தல் சிறப்பம்சத்திற்காக புகழ்பெற்றிருக்கின்ற இக்கண்காட்சி, ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலுமுள்ள கட்டிட நிர்மாணத்துறை சார்ந்த அனைத்து நிறுவன தரப்பினரும் தமக்கிடையே ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு தளமேடையாகவும், வள மையமாகவும் செயற்படும் என்று குறிப்பிட்டார்.

உள்நாட்டு விநியோகஸ்தர்களுக்கு மேலதிகமாக சீனா, மலேசியா, கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விநியோகஸ்தர்களது பொருட்கள் மற்றும் சேவைகளையும் இந்தக் கண்காட்சி காட்சிப்படுத்தும். அந்த வகையில் கண்காட்சியைப் பார்வையிட வருகின்ற பல்லாயிரக்கணக்கான காட்சியாளர்களுக்கு இது எல்லையற்ற சாத்தியக்கூறுகளை வழங்கும்.

இத்துறையில் உள்ள முக்கிய தீர்மானம் எடுக்கும் தரப்பினருடன் தொடர்புகொள்வதற்கான வசதியை இக்கண்காட்சி வழங்குகின்றது. அத்துடன், காட்சிப்படுத்துனர்களின் இலாபகரமான வியாபார வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகின்ற சமகாலத்தில், அண்மைக்காலமாக பெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்ற கேள்விச்-சார்புள்ள தொழிற்றுறைக்கு இக்கண்காட்சி மேலும் வசதி வாய்ப்புக்களை அளிக்கின்றது.

இக் கண்காட்சியை மேலும் மேம்படுத்துவதற்காக, நிர்மாணத் துறையுடன் தொடர்புபட்ட உப தொழிற்றுறைகளையும் ஒருங்கிணைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, உலக அரங்கில் தொடர்ச்சியாக மாற்றமடைந்து செல்லும் போக்குகளின்பால் ஈர்க்கப்பட்டுள்ள அதிகரித்துச் செல்லும் பொது மக்களுக்காக இங்கு ஒரு தொடரிலான கருத்தரங்குகளும் இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலை

பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் இல்லை

INSEE சீமெந்துக்கு இரண்டு சிறந்த முகாமையாளருக்கான விருதுகள்