சூடான செய்திகள் 1

மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை

(UTV|COLOMBO)-சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் அணியின் உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற இந்த சந்திப்பில், அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 9 பேர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.

எஸ்.பி.திஸாநாயக்க, டிலான்பெரேரா மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட ஏனைய 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் அதன் தலைவர் ஜீ.எல்.பீரிஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு இவ்வாரத்தில் சாதகமான பதில்

போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு