(UTV|MATARA)-மாத்தறையில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி காலை இடம்பெற்ற கொள்ளை சம்பத்தை அடுத்து பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த சம்பவத்தின் போது, கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்திகோகஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இரண்டு பொலிஸ் உத்திகோகஸ்தர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஹபரகட வசந்தவின் மனைவி நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹபரகட வசந்தவின் மனைவி கைது செய்யப்படும் போது அவருடைய ஹோமாகம வீட்டில் துப்பாக்கிச்சூட்டிற்கு பயண்படுத்திய துப்பாக்கி மற்றும் ரவைகள் சில கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]