வணிகம்

மரக்கறி வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும்

(UTV|COLOMBO)-மலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதற்கு விலை அதிகரித்துள்ளது என்று விவசாய திணைக்களம் விவசாய அமைச்சிக்கு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் மற்றும் யூன் மாதங்களில் மலையக மரக்கறி வகையின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று விவசாய திணைக்களம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்லியூ.எம்.எம்.வீரகோன் விவசாய அமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.

விவசாய அமைச்சில் நடைபெற்ற நாம் உற்பத்தி செய்வோம் நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து நிறுவனங்களுடனும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது அமைச்சர் நாட்டு மக்களால் பயன்படுத்தப்படும் மலையக மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பினார்.

இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவும் சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மரக்கறி வகை உற்பத்திக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று பதுளை மாவட்டத்தின் உற்பத்திகள் மீது காற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இன்னும் சில நாட்களுள் மரக்கறி வகையின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்…

நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித்திட்டம் அறிமுகம்

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்