சூடான செய்திகள் 1

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

(UTV|JAFFNA)-யாழ். சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் சிறுமி றெஜீனா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, சிறுமி ரெஜினாவிற்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமான இந்தப் பேரணியை ஆரம்பித்தவர்கள்
சேர் பொன். இராமநாதன் வீதியினூடாக சென்று, யாழ். பலாலி பிரதான வீதியை மறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, சிறுமி றெஜீனாவைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவத்திற்கு உடனடியாக நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

போதைப்பொருள் ஒழிப்பில் இலங்கை முதலிடம்…