வகைப்படுத்தப்படாத

நிக்கி ஹேலி – நரேந்திர ​மோடி சந்திப்பு

(UTV|INDIA)-ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி (Nikki Haley), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.

மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ள நிக்கி ஹேலி, டில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நிக்கி ஹேலி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்நாளான நேற்று டில்லியிலுள்ள முகலாய பேரரசின் உமாயூனின் சமாதி மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிக்கி ஹேலி, பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் மூவர் உயிரிழப்பு

අර්ජුන් මහේන්ද්‍රන්ට වරෙන්තු නියෝගය ලබා දෙන දිනය මෙන්න

NTJ Colombo District organizer granted bail