விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்

(UDHAYAM, ENGLAND) – இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவராக அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஆன ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் துணைத்தலைவர் ஆவார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக இருந்தவர் அலஸ்டைர் குக். சமீபத்தில் இங்கிலாந்து அணி பங்களாதேஷிற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடியது.

பங்களாதேஷிற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்த இங்கிலாந்து, இந்தியாவிற்கு எதிரான தொடரை 0-4 என இழந்தது.

இதனால் குக் தலைவர் பதவி மீது விமர்சனம் எழுந்தது. தன் மீது விமர்சனம் எழுவதை கருத்தில் கொண்டு குக் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் குக்கிற்கு பதிலாக யாரை தேர்வு செய்யலாம் என இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் ஆலோசித்து வந்தது. ஜோ ரூட்டிற்கே அதிக வாய்ப்பிருந்த நிலையில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரை அழைத்து நேர்காணல் நடத்தியது இங்கிலாந்து கிரிக்கட் வாரியம்.

Related posts

சர்வதேசக் கிரிக்கெட்டில் தடையாகும் சர்வதேச அணி

மேத்யூசை வீழ்த்திய தமிழன்

கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்