சூடான செய்திகள் 1வணிகம்

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது

(UTV|COLOMBO)-இலங்கை உயர் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமான SLIIT கல்வியகமானது தனது விஞ்ஞான முதுமானி கற்கை நெறிகளுக்கான Open day  நிகழ்வை அண்மையில் நடாத்தியது.

இந்நிகழ்வில் நடாத்தப்பட்ட செயற்பாடுகளில் பங்கேற்று MSc கற்கைநெறிகளுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு 15% விலைக்கழிவு வழங்கப்பட்டதுடன் முன்னர் SLIIT கல்வியகத்தில் கற்றவர்களுக்கு 10% மற்றும் தெரிவுசெய்யப்பட்ட தனியார் நிறுவன மாணவர்களுக்கு 20% ற்கும் அதிகமான விலைக்கழிவுகளும் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இக்கல்வியமானது கொமன்வெல்த் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக அமைப்பு என்பவற்றின் ஒரு உறுப்பினராகவும் உள்ளது.

தமக்குரிய துறைகளில் சிறந்த தலைமைத்துவத்துடன் மிளிருவதற்கான தகுதிகளுடன் கூடிய முதுமானி கற்கைநெறிகளை இக்கல்வியகம் வழங்குவதுடன் இம்முதுமானி கற்கைநெறியானது ஐந்து உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. அவற்றில் தகவல் தொழில்நுட்பமும் ஒன்றாகும். இத் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இணைய பாதுகாப்பு, வணிக செயலிகள் விருத்தி, தகவல் அமைப்புகள் மற்றும் தகவல் முகாமைத்துவம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக்கற்கைநெறிகளுக்கான தகுதியானது SLIIT கல்வியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாடு அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார் ஏதோனும் ஓர் துறையில் இளமானி பட்டக்கல்வியினை பூர்த்தி செய்திருத்தல் அல்லது தகுதிசார் துறையிலான தொழில் அனுபவம் இருத்தல் வேண்டும். மேலும் பதிவுசெய்யப்பட்ட ஒரு கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கும் மாணவர்களும் இக்கற்கைநெறிக்காக விண்ணப்பிக்க முடியும்.

இக்கற்கைநெறியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் தமது அசல் நற்சான்றிதழ் பத்திரங்களுடன் நேர்முகத் தேர்வொன்றில் கலந்துக்கொள்ள வேண்டும். இணைய பாதுகாப்பு தொடர்பிலான சிறப்பு கற்கைநெறிக்காக விரிவுரையாளர் 2 வருட காலத்திற்கு மாலபே SLIIT கல்வியக வளாகத்தில் ,BOC Merchant Tower அல்லது SLIIT மெட்றோ கல்வியக வளாகத்தில் நீடிக்கக்கபடுவார். இக்கற்கைநெறிக்கான விண்ணப்ப படிவத்தை www.sliit.lk  எனும் இணையத்தளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்ய முடியும். MSc கற்கை நெறி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் திமுத் குருசிங்ஹவை 0777605077 ஊடாக தொடர்புக் கொள்ளவும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு மீதான இன்றைய விசாரணை நிறைவு

10 தினங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட யானை