சூடான செய்திகள் 1

சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கடந்த 21 ஆம் திகதி அடித்து கொலை செய்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்கள்.

இந்நிலையில் குறிப்பிட்ட இருவரை தவிர மேலும் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்

ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை

வெள்ளம்,மண்சரிவை எதிர்கொள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தயார் நிலையில்