விளையாட்டு

இங்கிலாந்து 6 -1 கோல் கணக்கில் வெற்றி

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால் பந்துத் தொடரில் இன்றைய தினம் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் குழு A யில் சவுதிஅரேபியா – எகிப்து மற்றும் உருகுவே – ரஷ்யா ஆகிய அணிகளுக்கிடையில் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளது.

மேலும் குழு B யில் ஈரான்- போத்துக்கல் மற்றும் ஸ்பெயின் – மொறாக்கோ ஆகிய அணிகள் மோதவுள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற பேட்டியில் H பிரிவில் போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. இப்போட்டியில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் H பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளும் 2 – 2 கோல்களை பெற்று போட்டி சமநிலையில் நிறைவுபெற்றது.

குழு G யில் இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது .

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

தனது அணிக்காக தன் அர்ப்பணிப்பு குறித்து வெல்லவராயன் கருத்து

இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலையில் முன்னேற்றம்