சூடான செய்திகள் 1

இறக்குமதி பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-அடுத்த மாதம் முதல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பழங்களுக்கு வரி அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி அமைப்பினை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பெயரிடப்படும் பழ மரங்களை அனுமதியின்றி வெட்டுவதை தடைசெய்யும் திட்டமொன்றையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய உற்பத்திகளுக்கு கூடிய பெறுமதியை பெற்றுக்கொடுத்தலே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்.

அதன்படி, உள்நாட்டு பழ உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருமையை இல்லாதொழித்து, சகலருக்கும் அனுகூலங்களை பெற்றுத்தரும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி

பொரள்ளை – கொட்டாவை வீதிக்கு பூட்டு