சூடான செய்திகள் 1வணிகம்

நிதி தொடர்பில் விளக்கும் இந்தியச் சித்திரக் கதை நூல்கள்

(UTV|COLOMBO)-எமக்கும் எம் அயல்நாடான இந்தியாவிற்குமான தொடர்புகளானது என்றும் ஓர் பலம் மிக்க பாலமாகவே திகழ்ந்து வந்துள்ளது. இதன் இன்னுமொரு அத்தியாயமாய் கடந்த ஆண்டு இந்தியச் சிறுவர்கள் மத்தியில் கோலோச்சிய நிதி பராமரிப்பு தொடர்பிலான The Rupee tales எனும் 5 புத்தகங்கள் தற்போது எம் நாட்டுச் சிறுவர்களினதும் நிதிசார் அறிவை விருத்திசெய்யும் விதமாக சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள கண்டி புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் ரங்கப்பா என்பவரினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  The Rupee tales புத்தகங்களானது, அந்நாட்டின் பிரசித்தி பெற்ற நிதிசார் நிறுவனங்களில் ஒன்றான செரோதா (Zerodha) நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சிங்களமொழி புத்தங்களின் பதிப்புரிமை மற்றும் மொழிப்பெயர்ப்புரிமை அனைத்தும் தர்ஷன பதிப்பகத்தையே சாரும்.

இப்புத்தகங்களில் அடங்கியுள்ள நிதி தொடர்பான விடயங்களானது சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் சித்திரத்துடன் கூடிய எளிய கதையமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியச் சிறுவர்கள் இப்புத்தகத்தை விரும்பி படித்து, எளிதாய் புரிந்துக் கொள்ள வழிவகுத்துள்ளது. சேமிப்பு,வங்கி மற்றும் பணவீக்கம், வரி, காப்புறுதி மற்றும் பங்குச்சந்தை என்பன தொடர்பில் இந்த புத்தகங்களில் உள்ளடங்கியுள்ள கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தன் 7 வயது குழந்தை தன்னிடம் வந்து ‘அப்பா என்ன வேலை செய்கிறீர்கள்?’ என கேட்டுகொண்டே இருப்பதாகவும், அவளுக்கு தான் வேலை செய்யும் பங்குச் சந்தை தொடர்பில் எப்படி புரிய வைப்பது என்பது தெரியாமல் தவித்து, அது தொடர்பில் பிறிதொருமுறை அலுவலகத்தில் கலந்துரையாடிய போதே ஆசியச் சிறுவர்களுக்கு நிதிசார் அடிப்படை அறிவுகள் எதுவும் இல்லை எனும் உண்மை உரைத்தாகவும், அதனை வளர்க்க வேண்டியது எம் கடமை என எண்ணியதன் பலனாகவே இப்புத்தகங்கள் உருவானதாக கார்த்திக் ரங்கப்பா தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே இப்புத்தங்கள் எம் நாட்டிற்கும் மொழிப்பெயர்க்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

இப்புத்தகங்கள், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜுலை 1ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள கண்டி புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படுவதுடன், ஒரு புத்தகத்தன் விலை ரூ.300 ஆகும். நாளைய வளம்மிக்க நாட்டிற்கு, இன்றைய சிறுவர் முதற்கொண்டு அனைவரும் நிதி பேண்தகைமை தொடர்பில் அறிந்திருத்தல் அவசியமாகும். இதுவே அதற்கானதொரு அடிக்கல். இவ்வாறான புத்தகங்கள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கபடின் அது அனைத்து சமூகங்களையும் சென்றடையும் என்பது நிதர்சனம்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மழை மற்றும் காற்றுடனான வானிலை

சுற்றிவளைப்பில் 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி