சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று

(UTV|COLOMBO)-சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று இரண்டாவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

கடந்த 19ம் திகதி இந்த மேன்முறையீட்டு மனு முதல்முறையாக விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.

இதனால் குறித்த மனு மீதான விசாரணை இன்று வரையில் பிற்போடப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்காக, ஞானசார தேரருக்கு 6 மாதங்களில் நிறைவு செய்யும் வகையில் ஒரு வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி