(UTV|COLOMBO)-2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது அன்று நாட்டில் காணப்பட்ட ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த அனுபவங்களை மறந்துவிட்டவர்கள் இன்று மீண்டும் நாட்டுக்கு ஏகாதிபத்திய ஆட்சியை வேண்டி நின்ற போதும் 2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் வைத்த எதிர்பார்ப்பு வீண்போவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்று (21) முற்பகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஏகாதிபத்திய ஆட்சி யுகத்திற்கு முடிவுகட்டி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த சுதந்திரமும் ஜனநாயகமும் நூற்றுக்கு இருநூறு வீதம் இன்று நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி இ இன்றைய ஆட்சியை உயிரற்ற ஆட்சியாக அடையாளப்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றபோதும்இ இது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பயணம் என்பதை அவர்கள் அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
கிடைக்கப்பெற்றுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பிழையாக பயன்படுத்தி அரசாங்கத்தை சாடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றபோதும்இ நாட்டில் உள்ள கல்விமான்கள்இ புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரையும் ஒன்றுசேர்த்து நாட்டுக்குத் தேவையான சரியான அரசியல் மற்றும் அபிவிருத்திப் பயணத்தை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்வதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
கடந்த மூன்றரை வருட காலமாக நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் விலகிச் சென்றிருந்த சர்வதேசத்தை மீண்டும் தாய் நாட்டுடன் நெருக்கமாக்குவதற்கும் நாட்டுக்குத் தேவையான பல வெற்றிகளை கொண்டு வரவும் முடிந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இ இந்தப் பயணத்தை பின்னோக்கி திருப்புவதற்கு எவரும் உடந்தையாக இருக்கக் கூடாதென்றும் குறிப்பிட்டார்.
புதிய கம்உதாவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 81வது கம்உதாவ வீடமைப்பு திட்டமான குருணாகலை மாவட்டத்தில் உள்ள நிக்கவரெட்டியஇ கொட்டவெஹரஇ வெஹரபுர வீடமைப்புத்திட்டம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
6.67 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத்திட்டம் 32 வீடுகளை கொண்டுள்ளது. இவ்வீட்டுத்திட்டம் மின்சாரம்இ சுத்தமான குடிநீர் மற்றும் முறையாக அமைக்கப்பட்டுள்ள வாயில் மற்றும் உள்ளக வீதி முறைமையுடன்இ முன்மாதிரி வீட்டுத்திட்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி இ பார்வையிட்டார்.
முன்மாதிரி கிராமத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்தையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டதுடன்இ வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை நினைவுகூரும் வகையில் நாக மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.
வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளுக்கான திறப்புகளை ஜனாதிபதி வழங்கினார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசஇ காமினி ஜயவிக்ரம பெரேராஇ எஸ்.பி.நாவின்னஇ பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கஇ வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]