சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூலை 05ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (21) பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை வரையறுக்கப்பட்டு பர்பசுவல் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவரும் அர்ஜுன் அலோசியஸின் தந்தையுமான ஜெப்ரி அலோசியஸை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த வழக்குத் தவணையின் போது அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

58ஆவது தடவையாக பொலன்னறுவையில் பொசொன் அன்னதான நிகழ்வு

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனை

மு.கா பேராளர் மாநாட்டில் கைகலப்பு: விசாரணைக்கு ஹக்கீம் பணிப்பு.!