சூடான செய்திகள் 1வணிகம்

மீன், பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லுவதற்கு குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டி

(UTV|COLOMBO)-மீன் பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும் போது பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளுவதற்காக குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள கிராமிய பொருளாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரரய்ச்சி சீனா மற்றும் மலேஷிய பிரதிசதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் போது இவற்றின் தரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இதனை மேற்கொள்ளுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் போது அவற்றுக்கான கடன் வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரரய்ச்சி கூறினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்

பல கோடி ரூபா பெறுமதியான பாரிய தொகை ஹெரோயின் மீட்பு