சூடான செய்திகள் 1

யாழ். மல்லாகம் மோதல் சம்பவம் – இதுவரை 6 இளைஞர்கள் கைது

(UTV|JAFFNA)-யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முன்னர் இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இதுவரை 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். மல்லாகம் சந்தி ஆரோக்கிய மாதா தேவாயலத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

அந்த சம்பவத்தின் போது, அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அந்த சம்பவத்தின் பின்னர் குழு மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, நேற்று (20) இரு இளைஞர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

விசாரணையின் பின்னர், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பிரகாரம் இன்று (21) காலை அதே இடத்தைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பின்னர் குழு மோதலுக்குக் காரணமானவர்கள் மற்றும் மோதலில் ஈடுபட்டவர்கள் என கிட்டத்தட்ட 40 இளைஞர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்

யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை இன்று முதல்

வெளிப்பென்ன நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டது