(UTV|COLOMBO)-மோதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய வீதியின் மஹவத்த சந்தியில் இருந்து ஆலமரத்தடி சந்தி வரையான பாதையில், வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை (22) இரவு 9 மணி முதல் 25 ஆம் திகதி காலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த பகுதியின் ஊடான வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய நீர்குழாய்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இவ்வாறு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் பொலிஸார் அப்பாதையை பயன்படுத்துபவர்களுக்கான மாற்று வழிகள் சிலவற்றை அறிவித்துள்ளனர்.
மாதம்பிட்டிய சந்தியில் இருந்து கனேமுல்ல பாதை ஊடாக தவலசிங்காராம பாதையின் பஞ்ஞானந்த மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும், பஞ்ஞானந்த மாவத்தையில் இருந்து வரும் வாகனங்கள் தவலசிங்காராம பாதை ஊடாக பயணிக்காது, ஆலமரத்தடி சந்தியை கடந்து புளூமென்டல் வீதியூடாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நீர்கொழும்பு வீதியூடாக பயணிக்கும் கனரக வாகனங்கள் தொட்டலங்க சந்தியில் இருந்து மாதம்பிட்டிய பாதைக்கு உட்பிரவேசிக்காமால், இங்குருகடை சந்தியின் ஊடாக பயணிக்கவும், புளூமென்டல் வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் ஆலமரத்தடி சந்தியை கடந்து பஞ்ஞானந்த மாவத்தை ஊடாக அளுத் மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 178 ஆம் இலக்க பேருந்துகள் புளூமென்டல் வீதியூடாக வந்து ஆதர் சில்வா மாவத்தை ஊடாக வேல்ஸ் குமார மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]