சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு? அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-சிறைத் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போதே அமைச்சர் இந்தக் கருத்தை கூறினார்.

எனினும் இதற்கு முன்னரும் பௌத்த தேரர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்ற தீர்ப்பு குறித்து எதுவும் கூற முடியாது என்றும் கூறினார்.

தற்போது கூட சிறைத் தண்டனை பெற்றுள்ள 15 பௌத்த தேரர்கள் மற்றும் 03 இந்து மத தலைவர்கள் இருப்பதாகவும் கூறிய அமைச்சர், மிகவும் பாரிய குற்றங்கள் இழைத்து தண்டனை பெற்றுள்ள பௌத்த தேரர்களும் அதில் உள்ளடங்குவதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை சிலர் அரசியலாக்க முயற்சிப்பதாகவும், நாளை ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் ஏனைய பௌத்த தேரர்களும் அவ்வாறு கோரிக்கை விடுக்கும் நிலமை ஏற்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வன்னி மாவட்ட நிலையான அபிவிருத்திக்கு இன,மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

இன்று முதல் வழமைக்கு திரும்பும் புகையிரத சேவைகள்

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி