சூடான செய்திகள் 1வணிகம்

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமை

(UTV|COLOMBO)-நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சுமார் 18,000 மில்லியன் கடன்சுமை உள்ளதாக அதன் தலைவர், சட்டத்தரணி உபாலி மொஹட்டி தெரிவித்தார்.

இந்தக் கடன் சுமை காரணமாக எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் தன்மை காணப்படுவதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் தெரிவிக்கின்றார்.

கடந்த காலங்களில் அரச கொள்கை அமுலாக்கலின்போது ஏற்படும அதிகரித்த செலவீனங்கள், கடன்சுமை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் சுமையிலிருந்து விடுபடுவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் சட்டத்தரணி உபாலி மொஹட்டி குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையின் நீர் வழங்கலில் புதிய திருப்பம் என்கிறார் ஜீவன்

நாளை நள்ளிரவு முதல் மின் விநியோக தடை இடம்பெறாது…

WhatsApp செயலி பாவனையாளர்கள் கவனத்திற்கு