விளையாட்டு

எகிப்தை வீழ்த்தியது ரஷ்யா

(UTV|RUSSIA)-உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யா மற்றும் எகிப்து அணிகள் மோதிக்கொண்டன.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் எந்த அணியும் முன்னிலை பெறவில்லை.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ரஷ்யாவின் அகமது பதே 47வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து டெனிஸ் செரிதேவ் 59 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். தொடர்ந்து, ரஷியாவின் அர்டெம் சுபையா 62 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ரஷியா அணி 3-0 என முன்னிலை வகித்தது.

இதையடுத்து, ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் எகிப்து வீரர் மொமது சலா ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும் வரை யாரும் கோல் அடிக்கவில்லை

இறுதியில், ரஷ்யா அணி எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோஹ்லிக்கு போட்டியாக பாபர் அசாம்

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி…

LPL : கொழும்பு கிங்க்ஸ் எதிர்பாரா வெற்றி