சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிற்போடப்படாது

(UTV|COLOMBO)-தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி  நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, காலம் தாழ்த்தி நடைபெறும் என பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பிலான கோரிக்கை எந்தத் தரப்பினரிடமிருந்தும் விடுக்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் சிறுவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் வாகன நெரிசல்

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

வௌிநாட்டு யுவதியை கற்பழித்த காலி இளைஞர்கள்…