உள்நாடு

76 ஆவது சுதந்திர தினத்தன்று கைதிகளை சிறைச்சாலை பார்வையிடலாம்!

(UTV | கொழும்பு) –

76 ஆவது சுதந்திர தினத்தன்று கைதிகளை சிறைச்சாலை திறந்தவெளியில் பார்வையிடும் திட்டம் இம்மாதம் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமுல்படுத்தப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அன்றைய தினம் சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும். ஒரு கைதியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மூவர் பார்வையிடும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கைதியின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் உடைகளின் பொதி ஒருவருக்கு ஏற்ற அளவில் மட்டுமே கைதிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலை வளாகத்துக்குள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

கந்துருகஸ்ஹார சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவத்தில் மூவர் பணி நீக்கம்