வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை உயர்வு

(UTV|AFGHANISTAN)-இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

ரம்ஜானை முன்னிட்டு 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசுப் படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தலைநகர் காபூல் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாலிபன்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ரம்ஜானை கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ரோடாட் மாவட்டத்தில் பகுதியில் தலிபான்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் நேற்று வெளியானது.
இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த தாக்குதலின் பலி எண்ணிக்கை இன்று 36 ஆக உயர்ந்துள்ளது.
65 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேலும் 9 நாள் போர் நிறுத்தத்துக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை தலிபான்கள் ஏற்றுகொண்டதற்கான எவ்வித ஒப்புதல் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மட்டக்களப்பில் 23100 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மை

Update – அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Several Ruhuna Univeristy faculties reopen today