விளையாட்டு

ஃபிபா உலக கிண்ண தொடர் – வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த ரஷ்யா!

UTV | COLOMBO – உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் ரஷ்யா, சவுதி அரேபியாவை 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

1934ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரை நடத்தும் நாடொன்று பெற்ற அதிசிறந்த வெற்றியாக இது கருதப்படுகிறது.

ஸ்டானிஸ்லேவ் செர்செசோவின் ரஷ்ய காற்பந்து அணி குறித்து அண்மைக்காலமாக பெரும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

குறிப்பாக ரஷ்ய அணி இறுதியாக விளையாடிய 7 போட்டிகளில் வெற்றிப் பெற்றிருக்கவில்லை.

இதனால் ரஷ்ய ஜனாதிபதி உள்ளிட்ட பலர் அணியை கடுமையாக விமர்சித்துவந்த போதும், நேற்றையதினம் இடம்பெற்ற போட்டியில் 78ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் மத்தியில் ரஷ்யா பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

அதேநேரம் இந்த தொடரில் இன்றையதினம் எகிப்து மற்றும் உருகுவே அணிகள் மோதுவதுடன், இலங்கை நேரப்படி இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Related posts

மஹேலவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பதவி

உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பொண்டிங்…

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்வியாடெக்