சூடான செய்திகள் 1

பேஸ்புக் பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை செய்தி!!

(UTV|COLOMBO)-இந்த ஆண்டில் மாத்திரம் சமுக வலைதளங்கள் தொடர்பில் தங்களுக்கு 1100 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக, கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவும் செயற்பாடு குறித்த முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதேநேரம் பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தங்களது படங்களை தரவேற்றும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, படங்களை தரவேற்றும் போது நண்பர்கள் மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் தனியுரிமையை வகைப்படுத்துவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேஸ்புக் கணக்கில் தமக்கு அறிந்தவர்களை மாத்திரமே நட்பு பட்டியலில் இணைப்பதும், தாங்கள் அறியாதவர்களை நட்பு பட்டியலில் இணைக்காதிருப்பதும் சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது!

பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம்