சூடான செய்திகள் 1

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

UTV | COLOMBO – அசாதாரண வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதிருப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் உபத்தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கனபதி கணகராஜ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மண்சரிவுகள், வெள்ளப்பெருக்கு, நெடுங்குடியிருப்பின் சுவர் இடிந்து வீழ்ந்தமை, அதிக காற்றினால் வீட்டின் கூரைகள் கழன்று சென்றுள்ளமை போன்ற பல்வேறு அனர்த்தங்கள் மலையகத்தில் பதிவாகியுள்ளன.

ஆனால் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்பவில்லை – கரு ஜயசூரிய

இரவு சந்தை காரணமாக வாகன நெரிசல்…