வணிகம்

அரிசியை அதிக விலையில் விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – அரசாங்கம் விதித்துள்ள ஆக்ககூடிய சில்லறை விலைக்கு அரிசியை விற்பனை செய்யாத மற்றும் அரிசியை பதுக்கி வைப்போர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கமுடியும்.

இது தொடர்பான தகவல்களை 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் மூலம் அதிகார சபைக்கு அறிவிக்குமாறு சபை பொதுமக்களிடம் அறிவித்துள்ளது.

அரிசிக்கு ஆகக்கூடிய விலையை விதிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துடன் நாட்டின் பல பிரதேசங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் உறுதிசெய்துள்ள விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கு சில வர்த்தகர்கள் இதுவரைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுவது குறித்தே

நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன கருத்து தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் இதுதொடர்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரிசிக்கு தட்டுப்பாடை ஏற்படுத்தி அல்லது ஆகக்கூடிய விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில்இந்த முற்றுகைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அது தொடர்பான முறைப்பாடுகளை அதிகாரசபைக்கு வழங்குமாறும் நுகர்வோர் அதிகாரசபை தலைவர் தெரிவித்தார்.

 

Related posts

INSEE சீமெந்துக்கு இரண்டு சிறந்த முகாமையாளருக்கான விருதுகள்

தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்களை சந்தைப்படுத்தவில்லை

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு