சூடான செய்திகள் 1

இன்று அதிகாலை நடந்துள்ள கொடூர சம்பவம்

(UTV|COLOMBO)-பதுளை – பசறை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீப்பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலியானதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் வர்த்தக நிலையத்தில் தங்கியிருந்த உரிமையாளர், அவருடைய சகோதரி மற்றும் அவரின் சிற்றன்னையாகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

11 வயது சிறுமியை கொடுமைடுத்திய தாய்…

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு