வணிகம்

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மொபைல் பணமாற்ற சேவையை அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் முதல் தடவையாக´மொபைல் ஊடாக கணக்கிற்கு´ பணம் அனுப்பும் சேவைகளை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த கிழக்கு ஆசிய தேசத்தில் வாழும் சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட இலங்கை புலம் பெயர் சமூகத்துக்கு நேரடியாக பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்த சேவைவ சதியாக அமையும்.

வரையறுக்கப்பட்ட குளோபல் மணி எக்ஸ்பிரஸ் (GME) நிறுவனத்துடன் இணைந்து இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென் கொரிய குடியரசில் முதலாவதாக வெளிநாட்டு நாணய பரிமாற்றத்துக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுள்ள கம்பனிகளில் இதுவும் ஒன்றாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான குறைந்த கட்டணத்தில், ஆகக் கூடிய வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தில் நேரடி பணப்பரிமாற்றத்தில் ஈடுபட இது வழியமைத்துள்ளது.

இந்தப் புதிய சேவையின் சம்பிரதாய பூர்வ அறிமுகம் தென்கொரிய தலைநகர் சோலில் அண்மையில் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.ரெங்கநாதன் தலைமையிலான வங்கித் தூதுக்குழு இதில் பங்கேற்றது. பணம் அனுப்பலுக்கு இங்கு மிகவும் சாதகமான சந்தை வாய்ப்புக்கள் உள்ளமையை கருத்திற் கொண்டு தென் கொரியா வர்த்தக வங்கிகளுக்கு அதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதலை மட்டுப்படுத்தி உள்ளது. 2017 ஆகஸ்ட் முதல் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கத் தெடங்கியுள்ளது.

GME – கொமர்ஷல் வங்கி ´மொபைல் ஊடாக கணக்கிற்கு பணப்பரிமாற்ற சேவை அறிமுகம் செய்யப்பட முன், கொமர்ஷல் வங்கிக்கே உரித்தான அதிநவீன இணைய வழி நேரடி பணப்பரிமாற்ற சேவையான ஈஎக்ஸ்சேன்ஜ் தென் கொரியாவில் வாழும் இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் வருடாந்தம் கணிசமான தொகைகைளைக் கையாண்டு வந்தது.

GME உடனான இந்த மிக முக்கியமான ஒத்துழைப்பு பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் பிரதான செற்பாட்டுஅதிகாரி எஸ்.ரெங்கநாதன் ´GME மற்றும் கொமர்ஷல் வங்கி என்பனவற்றின் முறைமைகளின் ஒருங்கிணைப்பு தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலானபணம் அனுப்பும் சேவையில் ஒரு மைல்கல் அபிவிருத்தியாகும். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் சாதகமானதோர் தொழிலாளர் உடன்படிக்கை கடந்த பல வருடங்களாக அமுலில் உள்ளது. தென் கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இந்தப் புதிய சேவை மிகவும் வசதியானதாக அமையும்´ என்றார்.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தென் கொரியா மிகவும் சுறுசுறுப்பானதோர் சந்தையாகும். இங்கு இலங்கையர்கள் சராசரியாக மாதாந்தம் 2500 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கின்றனர். இது மத்திய கிழக்கு நாடுகளில் பெறப்படும் மாதாந்த சராசரி ஊதியத்தை விட மிகவும் அதிகமானதாகும். அதேபோல ஏனைய தூர கிழக்கு நாடுகளில் கிடைக்கும் வருமானத்தை விடவும் இது அதிகமானதாகும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புள்ளி விவரங்களின் படி வருடாந்தம் மூவாயிரம் முதல் ஆறாயிரம் இலங்கையர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு விஸாக்கள் வழங்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து பணத்தை அனுப்பும் பிரிவில் கொமர்ஷல் வங்கி மிகவும் சுறுசுறுப்பானபங்களிப்பை வழங்கிவருகின்றது. வங்கிக்கே உரித்தான அதிநவீன இணைய வழிபணப்பரிமாற்ற சேவையான ஈஎக்ஸ்சேன்ஜ் உட்பட மணிகிராம், றியா, எக்ஸ்பிரஸ் மணி ரெமிட்டன்ஸ் என பல்வேறு சேவைகளை வங்கி வழங்குகின்றது.

வங்கியின் பிரதான சக்திகளில் ஒன்றாக நாடு முழுவதும் உள்ள அதன் 261 கிளை வலையமைப்பு காணப்படுகின்றது. அவற்றுள் பல பொது விடுமுறை தினங்களிலும் வர்த்தக வங்கி விடுமுறை தினங்களிலும் திறந்துள்ளன. 767 ATM வலையமைப்பையும் வங்கி கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைப்பவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்பவர்கள் 60க்கு மேற்பட்ட விடுமுறை வங்கி நிலையங்கள், சுபர்மார்க்கெட் கரும பீடங்கள், அர்ப்பணிப்புடன் கூடிய வாடிக்கையாளர் அழைப்பு சேவை, பணம் கணக்கில் வைப்பிடப்பட்டதும் அதை அறிவிக்கும் குறுந்தகவல் சேவை என பல்வேறு சேவைகளையும் நன்மைகளையும் பெறமுடியும்.

தொடர்ந்து ஏழு வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ளகொமர்ஷல் வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது இலங்கையின் தலை சிறந்த வங்கி, மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2016 இல் மாலைதீவில் முதல் வரிசை வங்கி ஒன்றை அதிக பட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது. முழு அளவிலான தனது சொந்த பணப்பரிமாற்ற சேவைகளை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை எகிறுகிறது

எரிபொருள் விலை அதிகரிப்பு?

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்