சூடான செய்திகள் 1

விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

UP – CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி ஒன்றே துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரரும் மற்றைய தேரரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று (12) இரவு 11 மணியளவில் குறித்த வாகனத்தில் வந்த இனந் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

விகாராதிபதியின் அடிவயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் நிலை தற்போது மோசமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தங்காளை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வடக்கிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்’ தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையும் மீள ஆரம்பிக்கப்படுமென பிரதமர் மன்னாரில் அறிவிப்பு!

ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

நோர்வூட் பெரிய சோலங்கந்த தோட்டத்தில் சிறுத்தை குட்டி