சூடான செய்திகள் 1

பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தானில் இடம்பெறும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் போராடி வருகின்ற நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய தெற்காசிய நாடுகளிலும் காணாமல் ஆக்கப்படுதல்கள் தொடர்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஆறு மாதங்களுக்கு முன்னர் சமாதான செயற்பாட்டாளர் ரஸா கான் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் பாகிஸ்தான் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ள 4 ஆயிரத்து 804 சம்பவங்களில் ஆயிரத்து 640 சம்பவங்கள் தீர்க்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கல்வி அமைச்சு விடுத்த புதிய அறிவிப்பு!

ஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்…

இலங்கை வீரர்களிடம் பாக். அணி தலைவரின் தாழ்மையான வேண்டுகோள்