வகைப்படுத்தப்படாத

அமெரிக்க , வட கொரிய தலைவர்கள் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதியும் வடகொரிய ஜனாதிபதியும் மட்டும் கலந்து கொண்ட முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

41 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுடன் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இருநாடுகளினதும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும் கலந்துரையாடுகின்றனர்.

சிங்கப்பூரின் சென்டோசா தீவிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நிழற்படங்களை எடுத்ததன் பின்னர், ஊடகவியலாளர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் அறையிலிருந்து வௌியேறியுள்ளனர்.

பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கைலாகு கொடுத்தனர்.

மொழிபெயர்ப்பாளர்கள் இருவருடன் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

ஆட்சியில் உள்ள வடகொரிய ஜனாதிபதியொருவரை அமெரிக்க ஜனாதிபதியொருவர் சந்திக்கும் முதல்தடவை இதுவென்பதால் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக கருதப்படுகின்றது.

இது தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு நியூஸ் பெஸ்ட் குழுவினரும் அங்கு சென்றுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை தொடர்பிலான மேலதிக தகவல்களை உடனுக்குடன் வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Kim Kardashian West drops Kimono brand name

STF ஐ நீக்க நடவடிக்கை!

நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுடனான சந்திப்பு- (படங்கள்)