சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில்

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.

நேற்று (11) மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் ஆதரவு வழங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்தக பண்டார தெரிவித்துள்ளார்.

சுற்று நிரூபத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு தெரிவித்து நேற்று மாலை முதல் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக சின்தக பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தபால் ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்து இருப்பினும் அது போராட்டத்திற்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை என தபால் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்தக பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு மக்கள் வேறுபடக் கூடாது…

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்

அமைச்சரவைக் கூட்டம் இன்று (18)…