வகைப்படுத்தப்படாத

வடகொரியா ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதிப்பு…

(UDHAYAM, NORTH KOREA) – வடகொரியாவினால் ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் வுன் தெரிவித்துள்ளார்.

கொரிய அரச ஊடகத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றே இவ்வாறு நேற்று சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையானது புதிய வகை முயற்சியாக அமைந்துள்ளதாக வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத உற்பத்தி, ஏவுகணை பரிசோதனை என்பவற்றிற்கு எதிராக சர்வதேசம், வடகொரியா மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில், தொடர்ந்தும் வடகொரியா இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Suspect arrested with cigarettes worth Rs.1.3M

India halts space mission an hour before launch

நாமலுக்கு பிணை